Jan 30, 2010

இசைக் கல்லூரியில் மைக்கேல் ஜாக்ஸனின் வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டுபள்ளது.


இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நடத்தும் இசைக் கல்லூரியில் பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்ஸனின் வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டுபள்ளது.

இந்தக் கல்லூரியின் துவக்க நாளில் மைக்கேல் ஜாக்ஸன் பற்றிய பாடத்தை நடத்தப் போகிறவர் வேறு யாருமல்ல... ஏ ஆர் ரஹ்மான்தான்.

ஜாக்ஸன் மீது ரஹ்மான் கொண்டிருந்த அன்பு தெரிந்ததே. மைக்கேல் ஜாக்ஸனைச் சந்தித்த மிகச் சில இந்திய இசையமைப்பாளர்களில் ரஹ்மான் முக்கியமானவர். இருவரும் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அதற்குள் அகால மரணமடைந்துவிட்டார் ஜாக்ஸன்.

அவரது மரணத்தின்போது, ஜாக்ஸனைச் சந்தித்த தனது அனுபவத்தை கண்கலங்க பகிரந்து கொண்டவர் ரஹ்மான். இப்போது ஜாக்ஸன் மீதான தனது மரியாதை இன்னும் உயர்ந்த விதத்தில் காட்ட, தனது கே எம் கன்சர்வேட்டரி எனும் இசைக் கல்லூரியில் ஜாக்ஸனை ஒரு பாடமாகவே வைத்துள்ளாராம் ரஹ்மான்.

விரைவில், ஜாக்ஸன் பற்றி ஒரு ஆல்பம் உருவாக்குகிறாராம் ரஹ்மான். இதில் உலகில் உள்ள டாப் இசைக் கலைஞர்கள் பங்கேற்று தங்கள் மரியாதையை ஜாக்ஸனுக்கு செலுத்தவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு போலீஸ் புகழ்பாட தயாராகும் ஏ.ஆர்.ரஹ்மான்


சென்னை: தமிழ்நாடு போலீஸ் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி தயாரிக்கப்படும் ஆவணப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

திறமை மற்றும் தொழில்நுட்பத்தில் சர்வதேச அளவில் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு அடுத்தபடியாக புகழப்படும் தமிழ்நாடு போலீஸ் 150 ஆண்டு நிறைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 150வது ஆண்டு விழாவுக்காக ஆல்பம் ஒன்றிற்கு இசையமைத்துத் தரவேண்டும் என ஆஸ்கார் விருத்துக்கு முன்னதாகவே ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டது.

இதற்கு ஒப்புக்கொண்ட ரஹ்மான், ஆஸ்கார் விருதுக்கு பின்னர் படுபிஸியாகி விட்டார். அடுத்த சில மாதங்களுக்குள் ஏ.ஆர்.ரஹ்மான இதற்கான பணிகளை முடித்துக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக காவல்துறை கடந்து வந்த பாதை, 21ம் நூற்றாண்டில் தற்போதைய முன்னேற்றம் என எங்களின் பாரம்பரியம், பெருமை மற்றும் சாதனைகளை விளக்கும் வகையி்ல் இந்த ஆவணப்படம் அமையும் என காவல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்

ரஹ்மான் இசையில் கருணாநிதி எழுதிய செம்மொழி மாநாட்டுப் பாடல்!

சென்னை: கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டுக்காக முதல்வர் கருணாநிதி எழுதிய பாடலுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் மாதம் நடைபெறுகிறது. மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது என்பதை விளக்குவதற்கான பாடலை முதல்வர் கருணாநிதி இயற்றியுள்ளார். இந்தப் பாடல் இனி தமிழ் மொழி கருத்தரங்குகள் அனைத்திலும் ஒலிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பாடல் வருமாறு:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே
செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!


இந்தப் பாடலுக்கு இசையமைப்பது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் அவரது இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார் ஏஆர் ரஹ்மான். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி., பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர்.

Jan 28, 2010

சட்டைப் பட்டனில் யாருக்கும் தெரியாத கேமிரா…


இந்த தொழில்நுட்ப காலத்தில் தினமும் ஒரு கண்டுபிடிப்பு வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது

அந்த வகையில் இப்போது சட்டைப்பட்டனில் மறைந்திருக்கும் கேமிரா வந்துள்ளது இதைப்பற்றி தான் இந்த பதிவு.

நாம் அணியும் சட்டையில் பட்டனை எடுத்துவிட்டு அதற்கு பதில் கேமிரா பட்டனை வைத்துவிடுகின்றனர் பார்ப்பதற்கு இரண்டும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. சில முக்கியமான அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை யாரும் தெரியாத வண்ணம் படம் பிடித்துவிடுகின்றனர்.

இந்த கேமிரா மூலம் 720×480 பிக்சல் அளவு காட்சிகளை படமெடுக்க முடியும் ஒரு செகண்டுக்கு 30 பிரேம் என்ற வகையில் உள்ளது, தொடர்ச்சியாக 70 நிமிடம் வரை படம் பிடிக்க முடியும். 16GB மெமரியுடன் இந்த கேமிரா வெளிவந்துள்ளது, இந்த கேமிராவில் நாம் சேமிப்பதை உடனடியாக USB கேபிள் மூலம் கணினியில் ஏற்றலாம். இந்த கேமிரா பட்டன் எப்படி இருக்கும் என்பதை மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளோம்.

ஒரு உயர்நிலை அதிகாரி தனக்கு கீழ் வேலை பார்க்கும் நபர்களிடம் காட்டுமிராண்டி தனமாக நடப்பதையும் கல்லூரியில் ஆசிரியர்கள் மாணவர்களை திட்டுவதியும் இனி மறைவாக எடுக்கலாம் என்று இதன் வெளியீட்டு விழாவில் பலர் கூறியிருந்தனர். செய்தி சேகரிப்பாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தான்.

என்ன தான் நல்லதிற்காக பயன்படுத்தினாலும் இதனை தவறாக பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் அதனால் நாம் எப்போதும் முகம் தெரியாத நபர்களிடம் பேசும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது தான் நம் நோக்கம்.

Jan 25, 2010

டோனி ஷேவாக் மோதல்?

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் டெஸ்டில் கேப்டன் டோனி முகுதுவலி காரணமாக ஆடவில்லை.
இதனால் அவருக்கு பதிலாக தற்காலிக கேப்டன் ஷேவாக் கேப்டனாக பணியாற்றினார். இந்த டெஸ்டில் இந்தியா 114 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த டெஸ்டில் அமித் மிஸ்ரா மிகவும் சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட் கைப்பற்றினார். நேற்று தொடங்கிய 2 வது டெஸ்ட் போட்டியில் அமித்மிஸ்ரா நீக்கப்பட்டார். முதல் டெஸ்டில் நன்றாக வீசிய அவர் நீக்கப்பட்டது வல்லுனர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.
அதுவும் மிஸ்ரா கடைசி நேரத்தில்தான் கழற்றி விடப்பட்டார். அவருக்கு பதிலாக ஒஜா சேர்க்கப்பட்டார். சுழற்சி முறையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒஜாவுக்கு கேப்டன் டோனி வாய்ப்பை வழங்கினார்.
மிஸ்ரா நீக்கப்பட்டது தொடர்பாக கேப்டன் டோனிக்கும், தற்காலிக கேப்டன் ஷேவாக்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமித்மிஸ்ரா டெல்லியைச் சேர்ந்தவர். இதனால் அவர் இடம் பெற வேண்டும் என்பதை டெல்லியைச் சேர்ந்த ஷேவாக் விரும்புகிறார். இதனால் அவர் நீக்கப்பட்டது தொடர்பாக இந்திய அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்திய அணியில் தற்போது டோனி கோஷ்டி, ஷேவாக் கோஷ்டி என்று இருபிரிவுகள் இருப்பதாக தெரிகிறது. டெல்லியைச் சேர்ந்த காம்பீர், இஷாந்த் சர்மா, அமித்மிஸ்ரா ஆகியோர் ஷேவாக் பக்கம் இருக்கிறார்கள்.
டோனிக்கும், ஷேவாக்குக்கும் இடையே கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காயத்தை மறைத்து அணியில் இடம் பெற்றதாக ஷேவாக் மீது டோனி பாய்ந்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு ஷேவாக் உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு நீக்கப்பட்டார்.
அதில் இருந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஷேவாக்குடன் மோதல் இல்லை என்று டோனி முன்பு மறுத்து இருந்தார். தற்போது வெளியாகியுள்ள தகவல் மூலம் இருவருக்கும் இடையே மோதல் இருப்பது உறுதியாகி உள்ளது.

எத்தியோப்பிய விமானமொன்று பெய்ரூட் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது : 85 பயணிகள் கதி என்ன?

எத்தியோப்பிய விமானமொன்று பெய்ரூட் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. எத்தியோப்பிய விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்றே இவ்வாறு கடலில் மூழ்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.

பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும், குறித்த விமானம் கடலில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எத்தியோப்பிய பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானமொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளானதாகக் குறிப்பிடப்படுகிறது.
எத்தியோப்பிய தலைநகரான அடி அப்பா நோக்கிச் சென்ற விமானமே இவ்வாறு விபத்தில் சிக்கியதாக லெபனான் விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானத்தில் 85 பயணிகள் பயணம் செய்ததாகவும், அவர்களது நிலைமை குறித்து இதுவரையில் தகவல் வெளியிடப்படவில்லை.
மீட்புப் பணிகள் பற்றியோ அல்லது சேத விபரங்கள் பற்றியோ லெபனான் இதுவரையில் உத்தியோகபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
எனினும், இந்த விமான விபத்தில் பெரும் எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டிருக்கக் கூடுமென அறிவிக்கப்படுகிறது.
விமானத்தில் பயணித்த 50 பயணிகள் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என ரொய்டர்ஸ் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

கணினி வேகத்தை பெற்றுவிடமுடியும்


நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு குட்டீசோ விளையாட Game சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திருப்போம் இதனை கணிணி software Registery ல் அப்டேட் செய்து விடும் நாம் இந்த game விளையாட தொடங்கும் போது புதிய சில Instructions மூலம் இயங்க வைக்கும் சிலநாட்களில் அதனை Delete செய்து அடுத்த Game விளையாடுவோம் .
நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும்.
ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software ஐ ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்க்கு registry error என்று பெயர் .
இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் மெதுவாக செயல்பட தொடங்கும் .இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது, இதனை கண்டறிந்து நீக்க எனப்படும் software உள்ளது. இதனை நிறுவி அவற்றை முழுமையாக நீக்கலாம்.

ரீமேக் விஷயத்தில் விஜய்யை அடித்துக் கொள்ள ஆளில்லை…


ரீமேக் விஷயத்தில் விஜய்யை அடித்துக் கொள்ள ஆளில்லை… ஜெயம் ரவி ஜெயம் ராஜா கூட அப்புறம்தான்.
அந்த அளவு சேஃபாக விளையாட ஆசைப்படும் விஜய், இப்போது நடிக்கும் 50வது படமான சுறா கூட மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் சோட்டா மும்பையின் தழுவல்தான்.
இந்தப் படத்துக்குள் இன்னொரு ரீமேக் வேலையையும் செய்துள்ளார் விஜய். தெலுங்கில் வெளியான ஆர்யா2 படத்தின் ஹிட் குத்து பாட்டான ‘ரிங்கா ரிங்கா..’வை அப்படியே தமிழுக்கு உருவிக் கொண்டாராம். சும்மா இல்ல… பாட்டுக்கு தேவையான அளவு பணம் கொடுத்துள்ளார்.
தெலுங்கில் இந்தப் பாட்டுக்கு இசை தேவிஸ்ரீ பிரசாத். ஆனால் தமிழில் அதே பாட்டை மணிசர்மா ரீமிக்ஸ் பண்ணித் தருகிறாராம். தெலுங்குப் பாட்டில் பெண் குரலுக்கு முக்கியத்துவம் இருக்கும். தமிழில் அதை அப்படியே உல்டா பண்ணி விட்டார்களாம்…
ஏற்கெனவே தனது திருப்பாச்சி, சச்சின், ஆதி, குருவி, வில்லு போன்ற படங்களில் இதே வேலையைத்தான் செய்தார் விஜய்.