Jan 25, 2010

டோனி ஷேவாக் மோதல்?

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் டெஸ்டில் கேப்டன் டோனி முகுதுவலி காரணமாக ஆடவில்லை.
இதனால் அவருக்கு பதிலாக தற்காலிக கேப்டன் ஷேவாக் கேப்டனாக பணியாற்றினார். இந்த டெஸ்டில் இந்தியா 114 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த டெஸ்டில் அமித் மிஸ்ரா மிகவும் சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட் கைப்பற்றினார். நேற்று தொடங்கிய 2 வது டெஸ்ட் போட்டியில் அமித்மிஸ்ரா நீக்கப்பட்டார். முதல் டெஸ்டில் நன்றாக வீசிய அவர் நீக்கப்பட்டது வல்லுனர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.
அதுவும் மிஸ்ரா கடைசி நேரத்தில்தான் கழற்றி விடப்பட்டார். அவருக்கு பதிலாக ஒஜா சேர்க்கப்பட்டார். சுழற்சி முறையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒஜாவுக்கு கேப்டன் டோனி வாய்ப்பை வழங்கினார்.
மிஸ்ரா நீக்கப்பட்டது தொடர்பாக கேப்டன் டோனிக்கும், தற்காலிக கேப்டன் ஷேவாக்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமித்மிஸ்ரா டெல்லியைச் சேர்ந்தவர். இதனால் அவர் இடம் பெற வேண்டும் என்பதை டெல்லியைச் சேர்ந்த ஷேவாக் விரும்புகிறார். இதனால் அவர் நீக்கப்பட்டது தொடர்பாக இந்திய அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்திய அணியில் தற்போது டோனி கோஷ்டி, ஷேவாக் கோஷ்டி என்று இருபிரிவுகள் இருப்பதாக தெரிகிறது. டெல்லியைச் சேர்ந்த காம்பீர், இஷாந்த் சர்மா, அமித்மிஸ்ரா ஆகியோர் ஷேவாக் பக்கம் இருக்கிறார்கள்.
டோனிக்கும், ஷேவாக்குக்கும் இடையே கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காயத்தை மறைத்து அணியில் இடம் பெற்றதாக ஷேவாக் மீது டோனி பாய்ந்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு ஷேவாக் உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு நீக்கப்பட்டார்.
அதில் இருந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஷேவாக்குடன் மோதல் இல்லை என்று டோனி முன்பு மறுத்து இருந்தார். தற்போது வெளியாகியுள்ள தகவல் மூலம் இருவருக்கும் இடையே மோதல் இருப்பது உறுதியாகி உள்ளது.

0 comments:

Post a Comment