Jan 30, 2010

தமிழ்நாடு போலீஸ் புகழ்பாட தயாராகும் ஏ.ஆர்.ரஹ்மான்


சென்னை: தமிழ்நாடு போலீஸ் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி தயாரிக்கப்படும் ஆவணப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

திறமை மற்றும் தொழில்நுட்பத்தில் சர்வதேச அளவில் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு அடுத்தபடியாக புகழப்படும் தமிழ்நாடு போலீஸ் 150 ஆண்டு நிறைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 150வது ஆண்டு விழாவுக்காக ஆல்பம் ஒன்றிற்கு இசையமைத்துத் தரவேண்டும் என ஆஸ்கார் விருத்துக்கு முன்னதாகவே ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டது.

இதற்கு ஒப்புக்கொண்ட ரஹ்மான், ஆஸ்கார் விருதுக்கு பின்னர் படுபிஸியாகி விட்டார். அடுத்த சில மாதங்களுக்குள் ஏ.ஆர்.ரஹ்மான இதற்கான பணிகளை முடித்துக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக காவல்துறை கடந்து வந்த பாதை, 21ம் நூற்றாண்டில் தற்போதைய முன்னேற்றம் என எங்களின் பாரம்பரியம், பெருமை மற்றும் சாதனைகளை விளக்கும் வகையி்ல் இந்த ஆவணப்படம் அமையும் என காவல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்

0 comments:

Post a Comment