
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நடத்தும் இசைக் கல்லூரியில் பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்ஸனின் வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டுபள்ளது.
இந்தக் கல்லூரியின் துவக்க நாளில் மைக்கேல் ஜாக்ஸன் பற்றிய பாடத்தை நடத்தப் போகிறவர் வேறு யாருமல்ல... ஏ ஆர் ரஹ்மான்தான்.
ஜாக்ஸன் மீது ரஹ்மான் கொண்டிருந்த அன்பு தெரிந்ததே. மைக்கேல் ஜாக்ஸனைச் சந்தித்த மிகச் சில இந்திய இசையமைப்பாளர்களில் ரஹ்மான் முக்கியமானவர். இருவரும் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அதற்குள் அகால மரணமடைந்துவிட்டார் ஜாக்ஸன்.
அவரது மரணத்தின்போது, ஜாக்ஸனைச் சந்தித்த தனது அனுபவத்தை கண்கலங்க பகிரந்து கொண்டவர் ரஹ்மான். இப்போது ஜாக்ஸன் மீதான தனது மரியாதை இன்னும் உயர்ந்த விதத்தில் காட்ட, தனது கே எம் கன்சர்வேட்டரி எனும் இசைக் கல்லூரியில் ஜாக்ஸனை ஒரு பாடமாகவே வைத்துள்ளாராம் ரஹ்மான்.
விரைவில், ஜாக்ஸன் பற்றி ஒரு ஆல்பம் உருவாக்குகிறாராம் ரஹ்மான். இதில் உலகில் உள்ள டாப் இசைக் கலைஞர்கள் பங்கேற்று தங்கள் மரியாதையை ஜாக்ஸனுக்கு செலுத்தவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment