Jan 25, 2010

எத்தியோப்பிய விமானமொன்று பெய்ரூட் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது : 85 பயணிகள் கதி என்ன?

எத்தியோப்பிய விமானமொன்று பெய்ரூட் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. எத்தியோப்பிய விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்றே இவ்வாறு கடலில் மூழ்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.

பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும், குறித்த விமானம் கடலில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எத்தியோப்பிய பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானமொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளானதாகக் குறிப்பிடப்படுகிறது.
எத்தியோப்பிய தலைநகரான அடி அப்பா நோக்கிச் சென்ற விமானமே இவ்வாறு விபத்தில் சிக்கியதாக லெபனான் விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானத்தில் 85 பயணிகள் பயணம் செய்ததாகவும், அவர்களது நிலைமை குறித்து இதுவரையில் தகவல் வெளியிடப்படவில்லை.
மீட்புப் பணிகள் பற்றியோ அல்லது சேத விபரங்கள் பற்றியோ லெபனான் இதுவரையில் உத்தியோகபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
எனினும், இந்த விமான விபத்தில் பெரும் எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டிருக்கக் கூடுமென அறிவிக்கப்படுகிறது.
விமானத்தில் பயணித்த 50 பயணிகள் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என ரொய்டர்ஸ் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment