Jan 28, 2010

சட்டைப் பட்டனில் யாருக்கும் தெரியாத கேமிரா…


இந்த தொழில்நுட்ப காலத்தில் தினமும் ஒரு கண்டுபிடிப்பு வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது

அந்த வகையில் இப்போது சட்டைப்பட்டனில் மறைந்திருக்கும் கேமிரா வந்துள்ளது இதைப்பற்றி தான் இந்த பதிவு.

நாம் அணியும் சட்டையில் பட்டனை எடுத்துவிட்டு அதற்கு பதில் கேமிரா பட்டனை வைத்துவிடுகின்றனர் பார்ப்பதற்கு இரண்டும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. சில முக்கியமான அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை யாரும் தெரியாத வண்ணம் படம் பிடித்துவிடுகின்றனர்.

இந்த கேமிரா மூலம் 720×480 பிக்சல் அளவு காட்சிகளை படமெடுக்க முடியும் ஒரு செகண்டுக்கு 30 பிரேம் என்ற வகையில் உள்ளது, தொடர்ச்சியாக 70 நிமிடம் வரை படம் பிடிக்க முடியும். 16GB மெமரியுடன் இந்த கேமிரா வெளிவந்துள்ளது, இந்த கேமிராவில் நாம் சேமிப்பதை உடனடியாக USB கேபிள் மூலம் கணினியில் ஏற்றலாம். இந்த கேமிரா பட்டன் எப்படி இருக்கும் என்பதை மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளோம்.

ஒரு உயர்நிலை அதிகாரி தனக்கு கீழ் வேலை பார்க்கும் நபர்களிடம் காட்டுமிராண்டி தனமாக நடப்பதையும் கல்லூரியில் ஆசிரியர்கள் மாணவர்களை திட்டுவதியும் இனி மறைவாக எடுக்கலாம் என்று இதன் வெளியீட்டு விழாவில் பலர் கூறியிருந்தனர். செய்தி சேகரிப்பாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தான்.

என்ன தான் நல்லதிற்காக பயன்படுத்தினாலும் இதனை தவறாக பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் அதனால் நாம் எப்போதும் முகம் தெரியாத நபர்களிடம் பேசும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது தான் நம் நோக்கம்.

0 comments:

Post a Comment